குடும்ப மற்றும் வீட்டு வன்முறை மக்களின் வாழ்க்கையில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. மேலும் ஒவ்வொருவரும் பாதுகாப்பான மற்றும் மரியாதைக்குரிய உறவுகளுக்குத் தகுதியானவர்கள்.
எங்கள் அர்ப்பணிப்பு
Greater Western Water-இல் குடும்ப மற்றும் வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்ட அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நாங்கள் ஆதரவளிக்கிறோம். குடும்ப மற்றும் வீட்டு வன்முறை பல வடிவங்களை எடுக்கிறது என்பதையும், குழந்தைகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், பழங்குடி மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவுவாசி மக்கள், கலாச்சார மற்றும் மொழி ரீதியாக வேறுபட்ட பின்னணியைச் சேர்ந்தவர்கள், வயதானவர்கள் மற்றும் LGBTQIA+ என அடையாளம் காணும் மக்கள் போன்றோர் குடும்ப வன்முறையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் நாங்கள் புரிந்து கொள்கிறோம்.
நாங்கள் எப்படி உதவ முடியும்
நீங்கள் குடும்ப அல்லது வீட்டு வன்முறையை அனுபவித்தால், நாங்கள்:
எங்களது சமூகம் மற்றும் பராமரிப்பு குழு மூலம் உங்களுக்கு தனிப்பட்ட ஆதரவை வழங்குகிறோம்.
உங்கள் தகவலை தனிப்பட்டதாகவும் இரகசியமாகவும் வைத்திருக்கிறோம்.
உங்கள் கணக்கை, குறிப்பாக அது கூட்டுக் கணக்காக இருந்தால், பாதுகாப்பாக நிர்வகிக்க உதவுகிறோம்.
எந்தவொரு கட்டணச் சிரமத்தையும் கையாள உங்களுடன் இணைந்து பணியாற்றுகிறோம்.
உங்கள் தனிப்பட்ட விவரங்களை அணுக முயற்சிக்கும் மற்றவர்களிடமிருந்து அவற்றைப் பாதுகாக்கிறோம்.
உங்களுக்குத் தேவைப்படும்போது பிற ஆதரவுச் சேவைகளுடன் உங்களை இணைக்கிறோம்.
தொடர்பு கொள்ள ஒரு நேரடி எண்ணையும் மின்னஞ்சலையும் தருகிறோம், இதனால் உங்கள் கதையை மீண்டும் செய்ய வேண்டியதில்லை.
நிதி உதவி உண்டு
குடும்ப வன்முறை பணம் செலுத்துவதில் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். நாங்கள் இவற்றில் உங்களுக்கு உதவ முடியும்:
நெகிழ்வான கட்டண ஏற்பாடுகள்.
அரசு மானியங்கள் மற்றும் சலுகைகள்.
உங்கள் தண்ணீர்க் கட்டணத்தில் கடனை நிர்வகிக்க அல்லது குறைக்க தெரிவுகள்.
உங்கள் நீர்ப் பயன்பாடு மற்றும் பில்களைக் குறைப்பதற்கான வழிகள்.
கடன் வசூலிப்பு அல்லது விநியோகக் கட்டுப்பாடுகளிலிருந்து பாதுகாப்பு.
உங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு
உங்கள் தனியுரிமையை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். குடும்ப வன்முறைச் சூழ்நிலையைப் பற்றி நீங்கள் எங்களிடம் கூறும்போது:
உங்கள் கணக்கில் சிறப்புப் பாதுகாப்பு நடவடிக்கைகளை வைப்போம்.
குடும்ப வன்முறையில் நிபுணத்துவம் பெற்ற பணியாளர்கள் மட்டுமே உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பார்க்க முடியும்.
நாங்கள் உங்களுடன் எவ்வாறு தொடர்புகொள்கிறோம் என்பதில் கவனமாக இருப்போம்.
உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்கவும், உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் கூட்டுக் கணக்குகள் கூடுதல் கவனத்துடன் நடத்தப்படும்.
பொருத்தமான சிறப்பு நிபுணர் குடும்ப வன்முறைச் சேவைகளுக்கான பரிந்துரைகளை நாங்கள் வழங்குவோம்.
உதவி பெறுதல்
பின்வரும் வழிகளில் நீங்கள் ஆதரவை அணுகலாம்:
எங்களது சமூகம் மற்றும் பராமரிப்புக் குழுவுடன் பேச எங்களை அழைக்கலாம்
உங்கள் சார்பாக ஒரு ஆதரவுப் பணியாளர் அல்லது நிதி ஆலோசகர் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்
ஆதரவுச் சேவைகள் பற்றிய தகவலுக்கு எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடவும்
தொடர்புக்கு
உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், நீங்கள்:
13 44 99 என்ற எண்ணில் எங்களை அழைத்து, முன்னுரிமை அளிக்கப்பட்ட ஆதரவுக்கு குடும்ப வன்முறை மெனு தெரிவைத் தேர்ந்தெடுக்கவும்.
எங்கள் gww.com.au வலைத்தளத்தைப் பார்வையிடவும்
உங்களுக்கு ஆதரவளிக்க நாங்கள் இருக்கிறோம். உங்கள் நிலைமையை அக்கறையுடன் மரியாதையுடன் இரகசியத்தன்மையுடன் கையாளுவோம்.
இது எங்கள் முழுமையான கொள்கையின் எளிமைப்படுத்தப்பட்ட பதிப்பாகும். எங்கள் கொள்கையின் முழுமையான பதிப்பிற்கு, gww.com.au ஐப் பார்வையிடவும்